Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: kullampatti villagers

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, இரண்டு ஆண்டுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாததால் ஒரு கிராமமே வெளிச்சத்தை நோக்கி நகரப்பகுதிக்கு படையெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குள்ளம்பட்டி கிராமம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர்.   சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.   தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்...