50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் போராடலாமா? – ஹைகோர்ட் கண்டனம்
ரூ.50 ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு
ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை
ஏற்க முடியாது என்று சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மற்றும்
மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத
மாணவர்கள், பெற்றோர்களுக்கு
மனநல ஆலோசனை வழங்க வேண்டும்
என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம்,
சென்னை உயர்நீதிமன்றத்தில்
பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரனை இன்று (செப். 13) நடந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார்.
வழக்கறிஞர் சூர்யபிரகாசம், ''மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு காலை கட்டிப்போட்டுவிட்டு ஓடச்சொல்வதற்கு சமம். ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த 90 நாள்களாக போராடி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட...