‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்
இந்தியா டுடே, தேசத்தின் மனநிலை குறித்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. நாடு முழுவதும் 35801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, தனிநபர் வருவாய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, 2023, டிச. 15 முதல் 2024, ஜன. 28க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்தது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இப்போது அதிதீவிரமான பிரச்னையே இதுதான் என்று 71 சதவீதம் பேர் கொட்டித் தீர்த்துள்ளனர்.
படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், வேலையின் தரமும் குறைந்துள்ளது என்றும் புலம்புகின்றனர். அரசாங்க வேலைக்காக ஒரு பெரும் குழு, போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருவதாகவும் சொல்கின்றனர்.
ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிவீர் திட்டம், இளைஞர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதோடு, குறுகிய கால ஒப்பந்தம் என்பதால் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படு...