‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது.
படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட...