கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில் மின் இணைப்புப் பெட்டியில் இருந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இன்று (நவம்பர் 1, 2017) மதியம் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே இந்த துயரம் நிகழ்வு நடந்துள்ளது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் உள்பட மொத்தம் 8 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்நிலையில் கொடுங்கையூர் நிகழ்வு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பதிவில், "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவன செய்ய வேணடும்" என்று ...