கூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்!; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”
இந்தியர்களின் தேடலால் இன்றைய தேதியில் கூகுள் தேடியந்திரத்தையே களைத்துப் போகச்செய்திருக்கிறார் ஒரு கேரளத்துப்பெண். பிரியா பிரகாஷ் வாரியார் என்ற மலையாள நடிகை, தன் கண்களால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
அதென்னவோ அரபிக்கடலோர பெண்களுக்கும் அழகுக்கும் அத்தனை பொருத்தம். அதனால்தான் வைரமுத்துவும்கூட, 'அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே...' என்று பாடல் எழுதியிருப்பார்.
நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு கனவான விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி, ஊரெல்லம் பற்றி எரிந்தபோதுகூட, மற்றொருபுறம், மலையாள தேசத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலும், நடனமும் சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகின.
மனித மனங்களின் இரு எதிர்நிலையில் உள்ள குணாம்சமே இதற்குக் காரணம். துக்க வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், அடுத்த கணமே கொண்டாட்டத்திலும் ஈடுபடுகின்றனர் என்பதற்கு ஜிமிக்கி கம்மல்...