பூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்
பட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், 'மறைக்கப்பட்ட பறையர் வரலாறு' என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம்.
ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார்.
இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு...