”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”
உலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த்.
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர...