தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!
தங்க நகைகளுக்கு ஜூன் 16 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் இல்லை என ஜூவல்லரி நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை எழவே முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ஆகஸ்ட் மாதம் வரை எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
256 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் விற்பனை இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ச், பேனா உள்ளிட்டவற்றுக்கும், குந்தன் உள்ளிட்ட சில ஆபரணங்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், ஹால்மார்க் முத்திரை ...