1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்ப...