சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!
சங்ககிரி அருகே,
அரசுப்பள்ளியில்
குடிபோதையில்
வகுப்பறையில் தூங்கிய
ஆசிரியர் அதிரடியாக
பணியிடை நீக்கம்
செய்யப்பட்டார்.
அரசுப்பள்ளிகளில்
தரமற்ற கற்பித்தல் முறை,
போதிய உள்கட்டமைப்பு
வசதிகள் இல்லாதது,
குழந்தைகளுக்கு
பாதுகாப்பின்மை போன்ற
காரணங்களால் ஏற்கனவே
மாணவர் சேர்க்கை குறைந்து
வரும் நிலையில்,
ஒழுக்கக்கேடான
ஆசிரியர்களால் மேலும்
சீர்குலைந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் சங்ககிரி
அருகே உள்ள
கே.மேட்டுப்பாளையத்தில்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
செயல்பட்டு வருகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலும்
மொத்தமே 20க்கும் குறைவான
குழந்தைகளே படித்து
வருகின்றனர். இரண்டு
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இருதயராஜ் என்பவர்
தலைமை ஆசிரியராகவும்,
அறிவழகன் என்பவர்
இடைநிலை ஆசிரியராகவும்
பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களுக்கு முன்னுதாரணமாக
இருக்க வேண்டிய ஆச...