Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: dismiss 19 MLAs

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை (26/8/17) தமிழகம் வருகிறார். இதற்கிடையே, புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நாளை ஆளுநரை நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வருவது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிகிறது....