Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: CPM

திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக;  நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக; நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் நீடித்து வந்த கால் நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதன்படி, திரிபுராவில் கடந்த பிப்ரவரி 18ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் தலா 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 3, 2018) எண்ணப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. திரி
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

சென்னை, தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். உடுமலை சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் இன்று (டிசம்பர் 12, 2017) திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது: ஆணவப் படுகொலைக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சாதியைக் கவுரவமாகக் கருதி, சங்கரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால்