
அஜித்தின் ‘விவேகம்’ வசூல் எவ்வளவு?
அஜித்குமார் நடிப்பில் கடந்த 24ம் தேதி 'விவேகம்' படம் வெளியானது. 'வேதாளம்' படத்தை அடுத்து, இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தப்படம் வெளியாகிறது என்பதால், ரிலீசுக்கு முன்பே 'தல' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்தப்படம் 770 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் என நட்சத்திர அந்தஸ்து இருந்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவேகம் ஆரம்பத்திலேயே ரூ.120 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழில் ஜேம்ஸ்பாண்டு வகையறா பாத்திரங்களில் நடிக்க அஜித்குமாரை விட்டால் வேறு ஆளில்லை என்ற ரீதியில் நேர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.
'தல' ரசிகர்களை பெரிய அளவில் விவேகம் திருப்தி படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், 'வ...