
என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்
''என் பிறந்த நாளையொட்டி யாரும் கேக் வெட்ட வேண்டாம். அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுங்கள்'' என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கடலில் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கலப்பதாக ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். மேலும், அவர் அதிகாலையில் திடீரென்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார்.
வழக்கமான ட்விட்டர் அரசியலில் இருந்து கமல் நேரடியாக களம் இறங்கியது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்ப டுத்தியது. அத்துடன் அவர், அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்றுதான் ரசிகர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தாண்டு இரண்டு நாள்கள் முன்னதா...