Tuesday, December 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Bharathidasan University

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

கோயம்பத்தூர், சிவகங்கை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜனவரி 6, 2018) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் குழந்தைவேலு புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது, கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை புல முதன்மையராக பணியாற்றி வரும் பேராசிரியர் பி.மணிசங்கர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் பதவியேற்பார்கள் எனத்தெரிகிறது....