Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Audit Report

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் பல கோடி ரூபாய், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு போலி ரசீது மூலம் கையாடல் செய்துள்ள அதிர்ச்சி தகவல் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை என நான்கு மண்டலங்களும், 60 கோட்டங்களும் உள்ளன. இம்மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகள், அண்மையில் உள்ளாட்சித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், சூரமங்கலம் மண்டல கணக்கு வழக்கு விவரங்களை தணிக்கை செய்ததில், பல கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பதும், மாநகராட்சிக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விவரங்கள்: தணிக்கை அறிக்கையின் ஒரு பகுதி சேலம் மாநகராட்சி மையஅலுவலகத்தில் இருந்துசொத்துவரி, தொழில் வரி,பிறப்பு - இறப்பு படிவம்,சொத்து...
பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் போலி ஆசிரியர்கள் நியமனம், தவறான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி, 28 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.   ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் த...
ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் தண்டனையும், தில்லுமுல்லுகளை கண்டும்காணாமல் அடக்கி வாசித்தால் பதவி உயர்வும் வழங்கும் விந்தையான நடைமுறைகளை பெரியார் பல்கலையில் பின்பற்றப்படுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.   பெரியார் பல்கலை   சேலம் பெரியார் பல்கலை 28 துறைகளுடன், 101 கல்லூரிகள் இணைவுடன் இயங்கி வருகிறது. பல்கலையில், 150க்கும் மேற்பட்ட உதவி / இணை / பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.   இப்பல்கலையில் 2014ம் ஆண்டு ஜூன் முதல் 2017 ஜூன் வரை மூன்று ஆண்டுகள் சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த காலக்கட்டத்தில் பெரியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உதவி பெறும் கல்லூரிகளில் 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன.   ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடம் இருந்தும் 25 லட்சம் மு...
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப...