Sunday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: additional incharge

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பணி நியமனங்களில் ஊழல், முன்னாள் பதிவாளர் தற்கொலை மர்மம், தணிக்கையில் முறைகேடு என தொடர் சர்ச்சைகளின் வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பெரியார் பல்கலைக்கழகம், இப்போது பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கியதிலும் உள்நோக்கம் இருப்பதாக பல்கலை வட்டாரத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.   சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் மணிவண்ணன், 17.8.2018ம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார். அவருக்கு கடந்த 18ம் தேதி பல்கலை பேராசிரியர்கள் பாராட்டு விழா நடத்தி, வழியனுப்பி வைத்தனர். இதையொட்டி, ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே புதிதாக பதிவாளர் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள தேர்வாணையர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதுவரை முக்கிய பதவியான பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்பட...