Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வருமான வரித்துறை

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

அரசியல், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், ஜெயலலிதான் தோழி சசிகலா, 1674.5 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று அறிவித்தார்.   கருப்புப்பணத்தை ஒழிப்பது, தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறுவதை தடுப்பது, ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அப்போது அவர் சொன்னார்.   பிறகு, 2017 ஜனவரி மாதம் முதல் புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மாபெரும் முட்டாள்தனம் என்று பாஜகவினரைத் தவிர உலகின் எல்லா பொருளாதார வல்லுநர்களும
மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது. இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை. முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் 'பாரடைஸ் ஆவண கசிவு' மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3