Thursday, May 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மக்கள்தொகை

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இரு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. நடப்பு 2023ம் ஆண்டில், அமெரிக்காவின் ஜிடிபி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜ