Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பங்குகள்

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள் கிழமை (ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவ
ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்க உள்ளதாக பேச்சுகள் எழுந்ததை அடுத்து, மே மாத கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 34 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்தது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அண்மையில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டினார்.   பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது பார்வையைச் செலுத்திய நிலையில், உலகின் மற்றொரு டிஜிட்டல் ஜாம்பவனான கூகுள் நிறுவனமும், இந்திய தொலைதொடர்புத் துறையில் கால் பதிக்க ஆர்வம் காட்டுகிறது.   கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு இரு
2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மாறன் சகோதரர்களின் சன் டிவி நெட்வொர்க் மற்றும் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் இன்று 20 சதவீதம் வரை உயர்ந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு மற்றும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவன இயக்குநர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தன. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 19.89 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் ரூ.43