Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தொழில் அதிபர்

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பரோபகாரம் வெகுவாக அருகிவிட்ட இன்றைய சூழலில், தங்களது உத்தியோகத்தைக் கடந்து, சமூகத்தின் நலன் கருதி செயல்படுதல் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்ற மனோபாவம் பெரிதாக உருவெடுத்திருக்கிறது. அவரவரின் நிதிநிலை ஒன்றே தனிநபர்களின் அளவீடாக கருதும் காலம் மேலோங்கி இருக்கிறது. அதனால் எல்லோருமே பணத்தின் பின்னால் ஓடுவது என்பது கிட்டத்தட்ட காலத்தின் கட்டாயம் என்று தங்களுக்குத் தாங்களே நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்தி என்பவர், தன் சொந்த கிராமத்துப் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக பள்ளிக்கூடம் கட்ட தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்கி நாயக அவதாரம் எடுத்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அவ்வையாரோ, 'நட்பும் தகையும் கொடையும் பிறவிக்குணமாம்' என்கிறார். அதுபோ
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில