Monday, September 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சேலம் மாவட்டக் காவல்துறை

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக கடந்த மாதம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.   இதை உண்மை என்று கருதியவர்கள் சில இடங்களில் சந்தேகப்படும் நபர்கள் மீது சரமாரியாக தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பெண் ஒருவரும் தாக்கப்பட்டு இறந்தனர்.   இந்நிலையில், அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் சேலத்திலும் இன்று (ஜூன் 3, 2018) நடந்துள்ளது.   சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் இன்று மதியம் 2 மணியளவில் வட இந்தியப் பெண் ஒருவர் அழுக்கடைந்த டி-ஷர்ட்டும், அரைக்கால் டிரவுசர் ஒன்றும் அணிந்தபடி ஊருக்குள் சுற்றி வந்துள்ளார். ஒரு சில தெருக்களில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். இதைப்பார்த்த சிலர், அந்தப்பெண் குழந்தைகளைக் கடத...