Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கைது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர்  கைதானது எப்படி?;  ”வசூலிப்பதே  முழுநேர தொழில்”;  திடுக்கிடும் தகவல்கள்

பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைதானது எப்படி?; ”வசூலிப்பதே முழுநேர தொழில்”; திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல், நடந்த அனைத்து பணி நியமனங்களிலுமே யுஜிசி விதிமீறல்களும், பண பேரமும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீசார், இன்று (பிப்ரவரி 3, 2018) காலையில் கையும், களவுமாக சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்தப் பல்கலையின் துணைவேந்தராக கணபதி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். மன்னார்குடி கும்பலின் ஆசியுடன் அவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு ரொம்பவே இணக்கமாக இருந்தார். மன்னார்குடி கும்பல் ஆசி: அதனால்தான், சசிகலா கும்பல் கைக்காட்ட
பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பொறி வைத்துப்பிடித்து, கைது செய்தனர். கோயம்பத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர், கணபதி. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் அதன் உறுப்புக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு சுரேஷ் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அந்த பணியில் சேர வேண்டுமானால், தனக்கு ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி பேரம் பேசியுள்ளார