”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!
சேலத்தைச் சேர்ந்த மறைந்த
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகத்தின் மீதான நில
அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய
அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது.
2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக,
அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து,
அலைக்கழித்ததில் இறந்தே போனார்.
இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின்
மகனும், சேலம் கிழக்கு மாவட்ட
திமுக பொறுப்பாளருமான
வீரபாண்டி ராஜா என்கிற
ராஜேந்திரன் மீதும் இப்போது
நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
''தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிற...