
சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!
சொமேட்டோ நிறுவன புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த இலக்கை விட கூடுதல் பங்குகளுக்கு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
முன்னணி ஆன்லைன்
உணவு வர்த்தக நிறுவனமான
சொமேட்டோ, ஐபிஓ எனப்படும்
புதிய பங்கு வெளியீட்டில்
களமிறங்கியுள்ளது.
இதன் பங்கு வெளியீடு
புதன்கிழமை (ஜூலை 14)
தொடங்கியது. இதன்மூலம்
9375 கோடி ரூபாய் முதலீட்டை
ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் கடந்த
ஆறு மாதங்களில் வெளியான
ஐபிஓக்களில் சொமேட்டோவின்
பங்கு வெளியீடுதான்
மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
71 கோடியே 92 லட்சத்து
33 ஆயிரத்து 522 பங்குகளை
விற்க முடிவு செய்திருந்த
நிலையில், முதல் நாளிலேயே
75 கோடியே 64 லட்சத்து
33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு
முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து
உள்ளனர்.
மொத்த பங்குகளில்
இன்ஸ்டிடியூஷனல் அல்லாத
முதலீ...