
இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.
சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும்...