‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!
பெரியார் பல்கலையில், பதவி உயர்வுக்காக நடந்த செருப்படி சண்டையில் பரபரப்பு கிளப்பிய பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவரா£க பணியாற்றி வருபவர் குமாரதாஸ். இவர், வரும் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவரை, ஓய்வுக்குப் பிறகும் 'ரீ அப்பாயின்ட்மெண்ட்' எனப்படும் மீள்பணியமர்வு செய்ய சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிண்டிகேட்டின் இந்த முடிவுதான், பெரியார் பல்கலையை மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
ஓய்வு பெற்றவர்களுக்கு மீள் பணியமர்வு கூடாது என்று அரசாணை உள்ளது. ஏற்கனவே இதே பல்கலையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருக்கு மீள்பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
&nb...