Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சென்னை

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு:  “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு: “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக'' என்று அவரை வரவேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதும், அவர்கள் மீது திட்டமிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மே 17 இயக்கம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'தமிழ், தமிழர், தமிழர் உரிமைகள் என்ற மு-ழக்கங்களை ஒழித்துக் கட்டினால்தான் தமிழகத்தில் இந்து, இந்துத்துவம் என்ற பாசிச கொள்கைகளை வளர்க்க முடியும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நம...
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ...
கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கண்ணு போச்சு; மாரடைப்பு வந்துச்சு; தீர்வுதான் கிடைக்கல! அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கண்ணில் பார்வை பறிபோயும், மாரடைப்பில் பாதி உயிரை இழந்தும் தவித்து வருகிறார் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருவர். வெறும் 1500 பென்ஷனுக்காக ஆண்டுக்கணக்கில் முதியவரை அலைக்கழிக்கும் அவலம் சேலத்தில் நடந்து வருகிறது. ஊழல் செல்லரித்துப்போன அரசு அதிகாரிகளால், நொந்து நூலான சாதாரண சத்துணவு ஊழியரின் கதை இது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இச்சம்பவம் ஒரு சான்று. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). பனமரத்துப்பட்டி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். சக ஊழியர் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களில் சத்துணவு ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நிதி திரட்டி, பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தம்மந...
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
அதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப...
அப்படி சொன்னாரா உதயசந்திரன் ஐஏஎஸ்?

அப்படி சொன்னாரா உதயசந்திரன் ஐஏஎஸ்?

கல்வி, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-சின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை அத்துறை வட்டாரத்தையும் தாண்டி, பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், கல்வியாளர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கண்டனங்களே அதற்கு சான்று. இதையெல்லாம் தமிழக அரசு அவதானித்துக் கொண்டுதான் இருக்கும். உதயச்சந்திரன் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் அத்துறையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும், அவருக்கு 'செக்' வைக்கப்பட்டதற்கான சில காரணங்களையும் நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம். இப்போது மேலும் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பே, எந்தெந்த பள்ளிக்கு யார் யார் செல்ல வேண்டும் என்பதை ஆசிரியர்கள், தங்களுக்க...
ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை (26/8/17) தமிழகம் வருகிறார். இதற்கிடையே, புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நாளை ஆளுநரை நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வருவது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிகிறது....
தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' எனப்படும் அகில இந்திய மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (All India Institute of Medical Sciences), தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரு பிரதமராக இருந்தபோது, தெற்கு ஆசியா அளவில் மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்றும், அதுவே தனது கனவு என்றும் கூறினார். பின்னர், 1956ம் ஆண்டில் புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனம். இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி பல் மருத்துவம், செவிலியர் பயிற்சி, துணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் எய்ம்ஸ் நிறுவனத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. இந்நிலையில், இந்தியாவில் மேலும் ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய...
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர...
ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்...
சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

கல்வி, சென்னை, தகவல், மகளிர்
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. "மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கி...