Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேவை

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந...
பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேவை, தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
எதற்கும் உதவாது என வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய சைக்கிள்களை, பழுது பார்த்து மலைக்கிராம பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர் ஓசூர் இளைஞர்கள். அவர்களின் புதிய முயற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைக்கவே, அதை இதர ஏழை மாணவர்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாட்றாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அமைவிடம் என்னவோ, சமதளப் பரப்பில்தான் இருக்கிறது. எனினும், பிலிகுண்டு, சிவபுரம், பூமரத்துக்குழி, அட்டப்பள்ளம், பஞ்சல்துணை ஆகிய அடர்ந்த மலைக்கிராமங்களில் இருந்தும் கணிசமான மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர். மலைப்பகுதி என்பதால் நகர்ப்புறம்போல் அடிக்கடி பேருந்துகளும் செல்லாது. அதனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தால் பல மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகளின் நிலை இன்னும் மோசம...
கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்வி, கிருஷ்ணகிரி, சேவை, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் ஒன்று, பூதொட்டிக்கொட்டாய். இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாள். அடுத்தடுத்து மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச் செல்ல வேண்டியவள், நேராகச்சென்ற இடம் எது தெரியுமா? வயல்வெளி. ஆமாம். தினசரி 60 ரூபாய் கூலிக்கு களைப்பறிக்கச் சென்று வந்தாள். தோழிகள் புத்தகப்பையைச் சுமந்து செல்ல, இவளோ மதிய உணவுக்கான தூக்குச்சட்டியையும், களைக்கொத்தையும் சுமந்து சென்றாள்.   கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், 'ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை'யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு...