Saturday, January 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!

”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, அதிமுக தொண்டர் ஒருவரின் மனைவியை அக்கட்சி பிரமுகரே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கட்சிக்குள் மட்டுமின்றி உள்ளூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அதிமுகவில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளராகவும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா. ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். உள்ளூரில் இக்குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு உண்டு. அண்மையில், அவர் காமாட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரின் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரிடம் 'அத்துமீறிய' சம்பவம், சேலம் மாவட்ட இலை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜெகநாதன் மீது மல்லூர் காவல்நிலையத்தில் ப...
சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை டீன் கிருஷ்ணகுமார், இன்னும் 8 நாளில் ஓய்வு பெற இருந்த நிலையில், ஊழல் புகாரின்பேரில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத்தலைவராகவும், பல்கலை டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். இவர், கடந்த 2010ம் ஆண்டு சிறிது காலம் பெரியார் பல்கலை துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.   மேலும், எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீதுகளை தயாரித்து மோசடியில...
தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கந்த சஷ்டி கவசத்திற்கு  கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பொழிப்புரை ஒருபுறம்; கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டு உள்ளது, மற்றொருபுறம். பெரியார் சிலை அவமதிப்பு என்பது, கருப்பர் கூட்டத்தின் செயலுக்கு எதிர்வினையாகவே கருத முடியும்.   தமிழர் நாகரிகம், ஆரியப் பார்ப்பனர் படையெடுப்புக்குப் பின்னர் பெருமளவில் சிதிலமடைந்து இருக்கிறது. இப்போதுள்ள தமிழர்கள், முற்றாக ஆரிய டிஎன்ஏ ஆகவும் இல்லாமல், பழந்தமிழரின் டிஎன்ஏ ஆகவும் இல்லாமல் புதிய மூலக்கூறுகளுடன் இருக்கிறார்கள். சோறு என்பது சாதம் ஆனபோதே தமிழர்கள் ஆரியத்தின்பால் மூழ்கி விட்டார்கள் என்பதாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அவர்களுக்கு தமிழ்க்கடவுள் முருகன் யார்? ஆரியக்கடவுளான ஸ்கந்தன் (கந்தன்), சுப்ரமணியஸ்வாமி யார் என்பதில் எல்லாம் பெருங்குழப்பம் காணப்படுகிறது.   உ...
சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரணமாக முடிக்கப்பட்ட வழக்கை, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி காவல்துறை துருவி துருவி விசாரித்து வரும் நிலையில், ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், 'இறந்துபோன நபர் ஒன்றும் விஐவி அல்ல. ஒரு ரவுடி ஃபெல்லோ' என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி சித்தனூரில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சிலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் தாயின் மடியிலேயே உயிரிழந்தார்.   இதுகுறித்து சகுந்தலா, இரும்பாலை காவல் நிலையத்தில் தன் மகனை கோவிந்தராஜ், ராம்குமார், ஏழுமலை, முட்டை ராஜா என்கிற விஜயராஜா ஆகியோர் அடித்துக் கொன்றுவிட்டத...
கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரண வழக்கை சரியாக புலனாய்வு செய்யாததால் எட்டு ஆண்டுகள் கழிந்தும் தூக்கம் தொலைத்து நிற்கிறது சேலம் காவல்துறை. சிபிசிஐடி காவல்துறை மீண்டும் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், இளைஞரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் முதல் வழக்கை நீர்த்துப் போகச் செய்தவர்கள் வரை பலரும் கிலி அடித்துக் கிடக்கின்றனர்.  சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காத்தவராயன் கோயில் அருகில் வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக இருந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தற்போது 18, 14, 11 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.   கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதியன்று பகல் 11 மணியளவில், அதே ஊரைச் சிலர் மணிகண்டனை ...
தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தகவல், முக்கிய செய்திகள்
'நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   இத்திட்டத்தில் கடனுதவி பெற, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு மட்டும் அதி...
கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

இலக்கியம், முக்கிய செய்திகள்
  சங்க இலக்கியங்களில் பெண்களின் அங்கங்கள் குறித்தான வர்ணனைகள் உச்சம் தொட்டாலும், அவை ரசிக்கத்தக்க வகையிலேயே இருந்திருக்கின்றன. முகச்சுளிப்பை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், குறுந்தொகையில் உவமைகள் வெகு இயல்பாக பொருந்தி வந்திருக்கும். எல்லா காலத்திலும் ரசிக்கத்தக்க வகையில் பாடல்கள் அமைந்திருப்பதும் குறுந்தொகையின் தனித்த அடையாளம்.   எட்டுத்தொகையுள் செறிவும், இனிமையும் மிக்கது, குறுந்தொகை என்று எந்த அவையிலும் நாம் துணிச்சலாக கட்டுத்தொகை கூட வைக்க முடியும்.   தமிழ் ஆர்வலர்களிடம் உரையாடுகையில் அடிக்கடி இப்படிச் சொல்வேன்... ''குறுந்தொகையில் பாடல்களை எழுதிய புலவர்கள், பாடு பொருள்களுக்காக மெனக்கெட்டிருப்பார்களே தவிர, பொருள் (பரிசில்) தேடி அலைந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதுள்ள பேச்சாளர்கள் சிலர், க...
இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள் முடக்கிவிட்டு நடுவண் பாஜக அரசு, நாட்டையே தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டங்களை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. இது, அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி பலமட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, மின் விநியோகம், அணுசக்தி தயாரித்தல், விமான போக்குவரத்து, கனிமச்சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். இத்தகைய அதிரடியான முடிவுகள் எல்லாமே, தேசிய கட்டமைப்பு மேம்பாடு வரைவுத் திட்டத்திலேயே மறைமுகமாக கோடிட்டு காட்டியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட (National Infrastructure Pipel...
கருப்பு வெள்ளை: பஞ்சாயத்து டிவி எனும் சமத்துவ போராளி!

கருப்பு வெள்ளை: பஞ்சாயத்து டிவி எனும் சமத்துவ போராளி!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், வரலாறு
-பனை ஓலை- நாங்களும் ஒரு சாலிடேர் (கருப்பு-வெள்ளை) டி.வி. வைத்திருந்தோம். 1992க்குப் பிறகான காலக்கட்டம் அது. சேலத்தில் தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்த எனது மூத்த அண்ணன், அந்தப் பழைய சாலிடேர் டி.வி.,யை சொந்த ஊரில் பெற்றோருடன் வசித்து வரும் எங்களிடம் கொடுத்துவிட்டு, அவர் புதிதாக ஓனிடா கலர் டி.வி. வாங்கினார். கொம்பும், வாலும், நீண்ட காதுகளுடன் மொட்டத்தலை 'டெவில் மேன்' வரும் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த டி.வி.யை அண்ணன் வாங்கினார். அப்போதே அதன் விலை ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் என 'நினைக்கிறேன்'. 'போர்ட்டபிள்' அளவுக்கும் சற்று பெரிய திரை கொண்டது. நாங்கள் டி.வி. வாங்குவதற்கு முன்பு வரை, ஊர் மாரியம்மன் கோயிலில் இருந்த பஞ்சாயத்து டி.வி.தான் ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே சின்னத்திரை. சிறிய அறைக்குள் ஒரு கிராமமே, ஒருவர் மூச்சுக் காற்றை ஒருவர் சுவாசித்துக் கொண்டு நிகழ்ச்சிகளைக் கண்ட...
தேனீர்? தேநீர்? எது சரியானது?

தேனீர்? தேநீர்? எது சரியானது?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை வழங்கி, 34 வகையான கடைகளைத் திறக்க தமிழக அரசு திங்கள்கிழமை (மே 11) முதல் அனுமதி அளித்திருக்கிறது. அவற்றுள் முக்கியமானது, தேநீர் கடைகள் திறப்பு குறித்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம். ஆனால், கடைகளில் நின்று பருக அனுமதி இல்லை. பாத்திரத்தில் வாங்கிச் செல்லலாம். ஒரு கோப்பை தேநீரை ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி உறிஞ்சி பருகிக்கொண்டே அரசியல் பேசுவது என்பது தமிழர்களுக்கு எப்போதும் அலாதியானது.   ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் 'தேனீர்' கடைகள் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போதும் அச்சு ஊடகங்களில் பிழை திருத்தம் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைகளில் தினத்தந்திக்கு தனித்த இடம் உண்டு. ...