Sunday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

ஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை! தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்!!

ஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை! தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற பயங்கர நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி வேலை: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மகன் தினேஷ்குமார். நெல் அடிக்கும் இயந்திர ஆபரேட்டராக கூலி வேலை செய்து வருகிறார்.   இவருடைய மனைவி சாரதா. இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள தெற்குக்காடு பகுதியில் சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.   இந்தத் தம்பதிக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந்தார். அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள் கிழமை (அக்டோபர் 22, 2018ம் தேதி) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், சிறுமி ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து ப...
பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

சேலம், தமிழ்நாடு, புத்தகம், மதுரை, முக்கிய செய்திகள்
(பூவனம்)   மதுரையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் தானம் அறக்கட்டளை, ஓர் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை லாபநோக்கமின்றி செய்து வருகிறது. தானம், ஓர் இணை அரசாங்கத்தையே நடத்தி வருகிறது என்பதே சாலப்பொருந்தும். இதன் ஓர் அங்கமான சேலம் மண்டல களஞ்சியம், அக்டோபர் 2, 2018ம் தேதியன்று, 'புதிய வானம்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. வறுமை, கந்துவட்டி, மது உள்ளிட்ட சமூகக் கேடுகளில் இருந்தும், சமூக துயரங்களில் இருந்தும் மீண்ட 50 குடும்பத் தலைவிகளின் வெற்றிக்கதைகளை, 'புதிய வானம்' நூலில் பதிவு செய்திருக்கிறது, களஞ்சியம்.   வெற்றிக்கதைகளில் இருந்து சில... சில ஆண்டுகள் முன்புவரையிலும்கூட, விசைத்தறிக் கூடங்களில் வாரம் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த தன் கணவரை, இன்றைக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வைத்திருக்கிறார் குடும்பத் தலைவி, இலஞ்சியம்.  ...
சேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்!’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு!! #OneStopCentre

சேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்!’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு!! #OneStopCentre

காஞ்சிபுரம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
  - சிறப்புச்செய்தி -   குடும்பப் பிரச்னை முதல் பாலியல் தொல்லைகள் வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக அடைக்கலம் கொடுக்கவும், உளவியல் முதல் மருத்துவம் வரை அனைத்து உதவிகளை வழங்கவும் சமூகநலத்துறை சார்பில், 'ஒன் ஸ்டாப் செண்டர்' என்ற பிரத்யேக உதவி மையம் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.   பெண்களை பாதுகாக்கும் சட்டம்   புகுந்த வீட்டில் கணவர் மற்றும் மாமனார், மாமியார், கணவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க இந்திய அரசு ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ஐ அமல்படுத்தி உள்ளது. வரதட்சணை கொடுமைகள் குறித்த புகார்களை மட்டும் விசாரித்து வந்த இ.த.ச. பிரிவு 498ஏ-இல் இருந்து இந்த சட்டம் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ...
நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  புலனாய்வு இதழ்களில் தனக்கென தனித்த அடையாளத்துடன், எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும் இன்றுவரை பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது நக்கீரன். இந்த இதழின் ஆசிரியர் கோபால், நேற்றைய (அக்டோபர் 9, 2018) தினம் கைது செய்யப்பட்ட நிமிடம் முதல் ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ஆனார்.   சின்னதாக ஒரு விசாரணை புனே செல்வதற்காக நக்கீரன் கோபால், தனது நண்பரான சித்த மருத்துவர் ஒருவர், மற்றும் நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் ஆகியோருடன் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். சிறுநீர் கழிப்பதற்காக 'வாஷ் ரூம்' சென்ற கோபாலிடம் நெருங்கிய போலீசார், உயரதிகாரியின் பெயரைச்சொல்லி 'சின்னதாக ஒரு விசாரணை' என அழைக்கின்றனர்.   அப்படியே அவரை அணைத்துக் கூட்டிச்செல்லும்போது, அவரிடம் இருந்த செல்போனை பறிக்க போலீசார் முயன்றபோதே, தன்னை கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் க...
தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, இரண்டு ஆண்டுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாததால் ஒரு கிராமமே வெளிச்சத்தை நோக்கி நகரப்பகுதிக்கு படையெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குள்ளம்பட்டி கிராமம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர்.   சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.   தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்...
இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.   அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.   மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.   மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்கள்...
பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப, பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் தொடங்கிய ஊழல் முறைகேடுகள், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தொடர்கிறது. இதனால், 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.   முட்டுக்கட்டை:   முன்னத்தி ஏர்போல, முன்மாதிரி சமூகமாக விளங்க வேண்டிய சேலம் பெரியார் பல்கலைக்கழகமே, ஊழல் புரையோடிக் கிடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் சிண்டிகேட் அமைத்து ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் சுருட்டினர்.   ஊழல் குட்டுகள் வெளிப்படத் தொடங்கிய பின்னர், ஒருவரை ஒருவர் காலை வாரிவிடத் தயாரானபோதுதான், அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளின் விளைவாக, இப்போதும் பல உதவி, இணை பேராசிரியர்கள் பதவி உய...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், உடன் படித்து வந்த கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. செப்டம்பர் 6ம் தேதி, கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், ஒரே முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது படிப்பை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்திருந்தார். தீவிரமாக வேலை தேடி வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போது வெளியே சென்றாலும் தாய் சித்ராவிடம் சொல்லிவிட்டுச் செல்வதோடு, அன்று மாலைக்குள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அன்று இந்த நடைமுறைகள் எதையும் கோகுல்ராஜ் பின்பற்றவில்...
பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வாக...