Sunday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கரூர், குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் புதன்கிழமையன்று (டிசம்பர் 12, 2018) நடந்த சாட்சிகள் விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. முடித்திருந்தார். கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.   இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத்தலைவர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். ...
கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கிருஷ்ணகிரி, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை.   காவிரி ஆற்றில் சடலம்   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன.   இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர், ...
மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.   முதன்முதலாக சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   21ம் தேதி வரை திருவிழா   சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்! #Gokulraj #Day10

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்! #Gokulraj #Day10

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான புதிய தலைமுறை டிவி செய்தியாளர் நாமக்கல் நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்... சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதியன்று மாயமானார். மறுநாள் மாலையில் (24.6.2015), நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது.   பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்ததாக கருதப்பட்ட நிலையில்தான் அவருடைய சடலம் கைப்பற்றப்பட்டது. அதனால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.   தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை   இந்த வ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு! சைகையால் மிரட்டிய யுவராஜ்…சீறிப்பாய்ந்தார் நீதிபதி…!!

கோகுல்ராஜ் கொலை வழக்கு! சைகையால் மிரட்டிய யுவராஜ்…சீறிப்பாய்ந்தார் நீதிபதி…!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ், குற்றவாளி கூண்டிற்குள் இருந்து கொண்டே அரசுத்தரப்பு சாட்சியை தலையசைவுகள் மூலம் மிரட்டியதும், அதற்கு நீதிபதி யுவராஜை கடுமையாக எச்சரித்ததும்தான் கடந்த வாய்தாவின் பரபரப்பு காட்சிகளாக அமைந்தன.   தண்டவாளத்தில் சடலமாக சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சுவாதி. இவர்கள் இருவரும் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.   நெருங்கிய நண்பர்களும்கூட. 23.6.2015ம் தேதியன்று, சுவாதியை சந்திப்பதற்காக திருச்செங்கோடு சென்ற கோகுல்ராஜை அடுத்த நாள் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகத்தான் கைப்பற்றியது போலீஸ்.   கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தை...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 15வது குற்றவாளியான கிரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (நவம்பர் 3, 2018) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.   ஆணவக்கொலை   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற அவர், 24.6.2015ம் தேதி மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தண்டவாளத்தில் சடலம் கவிழ்ந்து கிடந்தது. தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.   அவர் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்த சுவாதியை காதலித்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்...
”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.   கொடுவாளால் வெட்டி கொலை முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும்,...
ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள  அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே பதினான்கு வயது சிறுமியை, ஆட்டை அறுப்பதுபோல் துடிக்க துடிக்க தலையை தனியாக வெட்டி வீசிய கொலைச்சம்பவம்தான், இன்றைக்கு சேலம் மாவட்ட மக்களை நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.   சிறுமி ராஜலட்சுமி   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி, சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள், ராஜலட்சுமி (14). தளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்து வருகிறார். இவருடைய மனைவி, சாரதா. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்த...
இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல், முக்கிய செய்திகள்
  முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.   தற்கொலை முயற்சி சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.   அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு ...
ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, இரவு நேரத்தில் வீடு புகுந்து பள்ளி மாணவியை துடிக்க துடிக்க தலை துண்டித்துக் கொலை செய்த கொடூரன், அந்நியன் விக்ரம் போல மாற்றி மாற்றி பேசுவதால் வாக்குமூலம் பெறுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஆத்தூர் அருகே...   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தரபுரம் தெற்குக் காட்டைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மகன் தினேஷ்குமார் (25). இரண்டாவது மகன், சசிகுமார். மூத்த மகன் தினேஷ்குமார், நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவயும், இரண்டரை வயதில் செல்வதரணித் என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.   இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாமிவேலு - சின்னப்பொண்ணு (45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந...