Friday, October 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

குற்றம், சேலம், நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு, வரும் மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், நாமக்கல்லைச் சேர்ந்த, தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.   கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.   மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.   கோகுல்ராஜ், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நெ...
வெல்லம் உருகி ஊத்துது… மிளகு சப்ளை இல்ல… தொடரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு குளறுபடி!

வெல்லம் உருகி ஊத்துது… மிளகு சப்ளை இல்ல… தொடரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு குளறுபடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உருகி ஓடும் வெல்லம், தரமற்ற மளிகைப் பொருள்கள், தருவதாகச் சொல்லப்பட்ட துணிப்பை இல்லாதது என ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அரிசி பெறக்கூடிய 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜன. 4ம் தேதி தொடங்கியது. 1200 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   பச்சை அரிசி (ஒரு கிலோ), வெல்லம் (ஒரு கிலோ), முந்திரி (50 கிராம்), உலர் திராட்சை (50 கிராம்), ஏலக்காய் (10 கிராம்), பாசிப்பருப்பு (500 கிராம்), ஆவின் நெய் (100 கிராம்), மஞ்சள்தூள் (100 கிராம்), மிளகாய்த்தூள் (100 கிராம்), மல்லித்தூள் (100 கிராம்), கடுகு (100 கிராம்), சீரகம் (100 கிராம்), மிளகு (50 கிராம்), புளி (200 கிராம்), கடலைப்பருப்பு (250 கிராம்), உளுந்தம் பருப்பு (500 கிரா...
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓசூரில் புதன்கிழமை (ஜன. 5) கைது செய்யப்பட்டார்.   கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. தனது பதவிக்காலத்தில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்துக் கொண்டு 3.10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின.   இது தொடர்பான இரு வேறு புகார்களின் பேரில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீதும் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.   இதையடுத்து ராஜேந்திரபாலாஜி, முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருடை...
பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழில் சிறந்த படைப்பாளளர்களுள் ஒருவராக திகழ்கிறார் அம்பை (77). இவருடைய இயற்பெயர், சி.எஸ். லட்சுமி. இவர், சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அந்திமழை, காட்டில் ஒரு மான், வற்றும் ஏரியின் மீன்கள் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார். தவிர, ஆங்கிலத்திலும் கணிசமான நூல்களை எழுதியிருக்கிறார்.   இவர் பிறந்தது கோவையாக இருந்தாலும், மும்பை, பெங்களூருவில்தான் வளர்ந்தார். டெல்லி நேரு பல்கலையில் பி.ஹெச்டி படிப்பை முடித்த அவர், பள்ளி, கல்லூரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர், விஷ்ணு மாத்தூர். அவர் திரைத்துறையில் இயங்கி வருகிறார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசிக்கிறார் அம்பை.   எழுத்தாளர் அம்பை தனது 18 வயதிலேயே 'நந்தி மல...
மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.   சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பு, அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான நடேசனுக்குச் சொந்தமானது. தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ...
சேலம்: மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆளெடுப்பு; விண்ணப்பிக்க ஜன. 4ம் தேதி கடைசி!

சேலம்: மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆளெடுப்பு; விண்ணப்பிக்க ஜன. 4ம் தேதி கடைசி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த 2007ம் ஆண்டு, தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.   மாவட்ட அளவில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர் (சோஷியல் ஒர்க்கர்), தரவு உள்ளீட்டாளர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) ஆகிய பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.   இப்பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை; ஒப்பந்த அடிப்படையிலானவை.   ஊதியம் எவ்வளவு?:   மாவட்ட ஆலோசகர் பணிக்கு மாத ஊதியம் 35 ஆயிரம் ரூபாய். சமூக பணியாளர் பணிக்கு மாத ஊதியம் 13 ஆயிரம் ரூபாய்...
கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.   கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப...
நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச. 11ம் தேதி, சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினமே, சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ள 1242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, மாங்கனி மாவட்ட மக்களை திக்குமுக்காடச் செய்தார்.   அதே விழாவில், மாநில அளவில் 300 கோடி ரூபாயில் நமக்கு நாமே திட்டத்தையும், 100 கோடி ரூபாயில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தாரை தப்பட்டை, நாட்டுப்புறக் கலைகள் என முதல்வருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பும் களைகட்டின. நடந்த வரை எல்லாமே சிறப்புதான் என்றாலும், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்த விளம்பர பலகையில் இடம் பெற்றிருந்த பிழையான ஒரு சொல், தமிழார்வலர்களின் மனதை நோகச்செய்தி...
மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் கொல்லப்பட்ட மசாஜ் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக மூன்று எஸ்ஐக்கள் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக உளவுப்பிரிவு உதவி கமிஷனர், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் மாநகர காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். அதிமுக பிரமுகர். இவருக்குச் சொந்தமான அபார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் தேஜ் மண்டல். 26 வயதான இவர், சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் செண்டர்களை நடத்தி வந்தார்.   தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், பக்கத்திலேயே இன்னொரு அறை எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய 3 பெண்களையும், லப்லு என்ற ஆணையும் தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட இவர்கள்...