Sunday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய...
சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!

சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலர் / கூடுதல் இயக்குநராக பணியாற்றி வரும் சாந்திமலர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள வசந்தாமணி, இதுவரை சாந்திமலர் வகித்து வந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்...
ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த தகவல்களில் இருந்து... தொற்றின் வேகம் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகமாக இருப்பது ஏன்?   உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதேபோல வீட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்போது அதிக நெருக்கம் காரணமாக அதிகப்படியான வைரஸ், நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நோயின் வீரியமும் அதிகமாக ஆகிறது.   முதல் அலையில் குடும்பத்தினுள் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறியிருக்கிறது. ஆகையால், குடும்பத்தினுள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பிறர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ...
சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, கோட்டையில் கொடி நாட்டினாலும், மாங்கனி மாவட்டமான சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கோட்டை விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அதேநேரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் இந்த மண்ணை அதிமுகவின் கோட்டை என நிரூபித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்களால் திமுகவால் இங்கு ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அதிமுக தனித்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் சூரியன் உதித்து இருந்தது. ...
நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

இலக்கியம், முக்கிய செய்திகள்
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் மானுடப் பிறவிக்கு மட்டுமேயானது. காதலில் விழுந்தோர்க்கு வெற்றி, தோல்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காதல் மட்டும் தோற்பதில்லை. இப்பிறவியில் காதல் அனுபவங்கள் இல்லாதவர்கள், எத்தகைய சுகபோகங்களை பெற்றவராக இருந்தாலும் கூட, ஒரு வகையில் குறை உடையவர்களாகவே கருதுகிறேன். காதலே தலைமை இன்பம் என்கிறான் பாரதி. காதலிப்போருக்கு மரணம் பொய்யாகும்; கவலைகள் போகும்; ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே! என்று அறைகூவல் விடுக்கின்றான்.   மார்க்ஸ் - ஜென்னியின் காதல் பேசப்பட்ட அளவுக்கு, செல்லம்மா மீது பாரதி கொண்ட அளப்பரிய காதல் பேசப்படவில்லை.   நாமும் இப்போது பாரதியைப் பற்றி பேச வரவில்லை. 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் மீண்டும் சங்க இலக்கியமான குறுந்தொகையில் இருந்து இன்னொரு காதல் பாடலைப் பற்றி பேசுவோ...
திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

நாமக்கல், முக்கிய செய்திகள்
திருச்செங்கோடு அருகே, பொது வெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்களை உள்ளூரைச் சேர்ந்த கவுண்டர் சமூக ஆள்கள் தட்டிக் கேட்டபோது, அவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லாததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பட்டியல் சமூக வாலிபரின் காது ஜவ்வு கிழிந்தது.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (32). ரிக் லாரி ஓட்டுநர். இதே ஊரைச் சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40). அவினாசிப்பட்டி ஊராட்சிமன்றத் துணைத்தலைவர். இருவரும் உறவினர்கள். கடந்த 4ம் தேதி இரவு, அவினாசிப்பட்டிக்கு பக்கத்து ஊரான வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றபோது செயின் ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொண்டிருந...
சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.   மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 246 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 15 ஆயிரத்து 19 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 204 பேர் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்கள் உள்ளனர்.   கடந்த ஏப். 6ம் தேதி நடந்த தேர்தலில் 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாம் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுக்கும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இ...
நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை அக்காள் கணவரே சீரழித்ததோடு, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதில், பிஎஸ்என்எல் அதிகாரியும் சிக்கியுள்ள நிலையில், 12 பேரை கூண்டோடு கைது செய்திருக்கிறது காவல்துறை.   நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (55). இவருடைய மனைவி லட்சுமி (45). தறித்தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள்; ஒரு மகன். மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இளைய மகள் செல்வி (14). (பெற்றோர் மற்றும் செல்வியின் பெயர்கள் புனையப்பட்டவை).   சந்திரசேகருக்கு உடல்நலம் சரியில்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தந்தையை கவனித்துக் கொள்வதற்காக சிறுமி செல்வி, 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார். செல்வியின் மூத்த அக்காள...
முக சிகிச்சையால் வந்த வினை! எப்படி இருந்த ரைஸா… இப்போது இப்படி ஆனார்!!

முக சிகிச்சையால் வந்த வினை! எப்படி இருந்த ரைஸா… இப்போது இப்படி ஆனார்!!

சினிமா, முக்கிய செய்திகள்
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைஸா வில்சன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு தமிழத்திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வேலை இல்லா பட்டதாரி-2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.   தற்போது எப்ஐஆர், தி சேஸ், ஹேஷ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரைஸா வில்சன், அடிப்படையில் ஒரு மாடல் அழகியும் ஆவார். அதனால் எப்போதும் தன்னை பொதுவெளியில் வசீகரமாக காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டு வருவார். அண்மையில், ஃபேஷியல் செய்து கொள்வதற்காக சென்னையில் உள்ள பிரபலமான அழகுநிலையத்திற்குச் சென்றிருந்தார். பேஷியல் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அவருடைய முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார். அடுத்த ஓரிரு மணி நேரத்தில் முகமே வ...
ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நாயகர்கள் பிறப்பதில்லை. சூழ்நிலைகளும் நிகழ்வுகளுமே நிஜ நாயகர்களை உலகுக்கு அவ்வப்போது அடையாளம் காட்டி விடுகிறது. அப்படி, நாடு போற்றும் நாயகனாக ஆனவர்தான் 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர் ஷெல்கே. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மத்திய வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார், மயூர் சகாராம் ஷெல்கே என்ற இளைஞர். ஏப். 17ம் தேதி, இந்த ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் தாயுடன் 6 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, சிறுவன் கால் இடறி, நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்துவிட்டான்.   பதறிப்போன தாய், மகனின் அழுகுரல் சத்தம் கேட்டு மேலும் பதற்றம் அடைகிறார். குழந்தையின் மரண ஓலம் வந்த திசையை அவரால் உணர முடியவில்லை. அப்போதுதான் அந்த தாய், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி என்பதே தெரியவருகிறது. தொலைவி...