Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டில் இருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக,...
சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

குற்றம், கோயம்பத்தூர், சென்னை, தூத்துக்குடி, தேனி, முக்கிய செய்திகள், வேலூர்
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.   மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கையால் நூற்ற நூலை, கையாலும் காலாலும் நெய்யப்படும் துணிதான் கதர். அப்படியான கதர் துணி நெசவாளர்கள் மற்றும் கிராம கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள சங்கங்களில் நாலைந்து தவிர ஏனைய சர்வோதய சங்கங்கள் கதர் துணிமண...
சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, 5 லட்சம் ரொக்கப்பரிசு! சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு!!

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, 5 லட்சம் ரொக்கப்பரிசு! சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு!!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:   பத்திரிகையாளர்கள் நலவாரியம்:   தமிழ்நாட்டில் முதன்முதலாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து முதல்வர் பெருமை சேர்த்துள்ளார்.   அதன் அடிப்படையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்...
நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந...
பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு...
மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதுடன், வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்ஆயத்தக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.   இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஆக. 21) விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:   கொரோனா தொற்று குற...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.   பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க...
ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொருளாதாரத்தின் மேல் அடுக்கில் உள்ளோரும், அரசின் உயர் மட்ட அதிகாரத்தில் இருப்போரும் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து எப்போதும் விலகியே இருக்கின்றனர். அதனால் வெகுசன மக்களும் அத்தகைய அரசு ஸ்தாபனங்களை நம்பாமல் தனியாருக்குச் செல்லும் போக்கு சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.   இந்நிலையில், தனது ஒரே ஒரு செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.   சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.   இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்தது. இ...
தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதன்முதலாக 2021-2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (ஆக. 13), சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்து, உரையாற்றினார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கை, காகிதங்களில் அச்சிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்படும். காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில், முதன்முதலில் காகிதமில்லா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை அறிந்து கொள்வதற்காக அனைத்து எம்எல்ஏக்களின் இருக்கையிலும் கணினித் திரை வைக்கப்பட்டது.   பட்ஜெட் 2021 சிறப்பு அம்சங்கள்:   இலவச வீடுகள்:   நடப்பு 2021 - 2022ம் நிதியாண்டில் 8017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புற ...
ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 13) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வரலாற்றில் முதன்முதலாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் ஆனது.   நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாற்றினார்.   திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளில் ஆண்களை குடும்பத் தலைவராக பதிவு செய்திருந்த பலர், பெண்களை குடும்பத்தலைவராக குறிப்பிட்டு ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யத் தொடங்கினர்.   இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பெண்கள் பெயரில் புதிய ரேஷன் கார்டுக்காக பதிவு செய்வோர் கூட்டம் அலைமோதி...