Saturday, March 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-   1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.   இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.   அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறமொழ...
இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்!  ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்! ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

கோயம்பத்தூர், முக்கிய செய்திகள்
"இந்த சமுதாயம்தான் நமக்கு எல்லாமே கொடுத்தது; கொடுத்து வருகிறது. நாமும் அதற்குரிய நன்றிக்கடனைச் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்காகவே, இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சொந்த செலவில் நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம்," என்று தீர்க்கமாக பேசுகிறார் மோகன்ராஜா. கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜா (37). இயற்கை மீதான நேசத்தின் வெளிப்பாடாக, 'காமதேனு' விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை'யை நிறுவி, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து... "நாட்டுப் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் நம்மை அண்டாமல் தடுக்க, இயற்கை நமக்கு அளித்த கொடைதான் நாட்டு மாட்டினங்களும் அவை தரும...
திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள், வரலாறு
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது.   இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலா...
தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
-குற்றம் கடிதல்-   'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.     ஆண்டான் அடிமை: பொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.   சேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை. நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்க...
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்?

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்?

ராசிபலன்
மேஷம் ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச...
ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

அலோபதி, சேலம், மருத்துவம்
மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்களே ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு.   குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம்.   அறிகுறிகள்?   வயிறு வ...
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர...
ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்...
இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், முக்கிய செய்திகள்
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற்கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தத...
தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
-தில்லை தர்பார்- பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா? இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.   ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.   தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்ற...