Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?; காவலர் போட்டித்தேர்வில் கேள்வி

இரண்டாம்நிலைக் காவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வில், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகக் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள 6140 இரண்டாம் நிலைக்காவலர் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11, 2018) நடந்தது. 232 மையங்களில் சுமார் 3 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

இத்தேர்வு மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. பொது அறிவு பகுதியில் இருந்து 50 வினாக்களும், உளவியல் பிரிவில் இருந்து 30 வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். அவர்களுக்கு உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

எழுத்துத்தேர்வுக்கான கால வரம்பு 80 நிமிடங்கள். அதாவது, காலை 10 மணிக்கு தொடங்கி 11.20 மணிக்கு தேர்வு முடிந்து விடும். ஆனால், தேர்வுக்கூடத்திற்கு 9 மணிக்கெல்லாம் வந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் கூறியிருந்தது.

தேர்வுக்கூடத்தில் தேர்வர்களுக்கு விடையளிக்க வேண்டிய ஓஎம்ஆர் தாள் வழங்கப்பட்டது என்னவோ வழக்கம்போல் பத்து மணிக்குதான். ஆனாலும் தேர்வு முடிந்த பின்னரும் தேர்வுக்கூடத்தை விட்டு எந்த ஒரு தேர்வரையும் வெளியே அனுப்பாமல் அமர வைக்கப்பட்டு இருந்தனர். அறை கண்காணிப்பு பணியில் இருந்த ஊழியர்கள், ஒவ்வொரு ஓஎம்ஆர் விடைத்தாளும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என சரிபார்த்த பின்னரே தேர்வர்களை வெளியேற அனுமதித்தனர்.

இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்து, தேர்வர்கள் மதியம் 1 மணிக்குதான் தேர்வுக்கூடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதனால், தேர்வர்களை அழைத்துச் செல்வதற்காக உடன் வந்திருந்த பெற்றோர், சகோதர, சகோதரிகள் ஒவ்வொரு தேர்வு மையத்தின் அருகிலும் ஒதுங்குவதற்கு நிழலின்றி வெயிலிலேயே பல மணி நேரம் காத்திருந்தனர்.

உளவியல் பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.

அண்மையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, பெரியார் சிலைகள் தகர்க்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். திரும்பிய திசையெங்கும் அவருக்கு எதிர்ப்புகள் வலுக்கவே, அவர் தனது பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், இன்று நடந்த காவலர் பணிக்கான போட்டித்தேர்வில், பொது அறிவு பகுதியில் பெரியார் குறித்தும் ஒரு வினா கேட்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்? என்று அந்த வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு விடை வாய்ப்புகளாக அ) ஈ.வே.ராமசாமி ஆ) சி.என்.அண்ணாதுரை இ) காமராஜர் ஈ) எஸ்.சத்தியமூர்த்தி என வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு ஈ.வே.ராமசாமி என்பதே சரியான விடை.

பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா.வின் தந்தை பெயர் வெங்கடப்ப நாயக்கர். அதனால் பெரியாரை ஊரின் பெயர், தந்தையின் பெயரை முன்னொட்டாகச் சேர்த்து ஈரோடு வெங்கட ராமசாமி நாயக்கர் என்றழைப்பர். அதை சுருக்கமாக ஈ.வெ.ரா. என்கின்றனர். ஆனால், காவலர் தேர்வு வினாத்தாளில் ஈ.வெ.ரா என்பதற்குப் பதிலாக ஈ.வே.ரா என்றே அச்சிடப்பட்டு இருந்தது.

பெரியார் பற்றிய சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், காவலர் போட்டித்தேர்விலும் அவர் பற்றிய வினா கேட்கப்பட்டு இருப்பது குறிப்பிட