Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Social Reformer

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?;  காவலர்  போட்டித்தேர்வில் கேள்வி

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?; காவலர் போட்டித்தேர்வில் கேள்வி

ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இரண்டாம்நிலைக் காவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வில், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகக் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள 6140 இரண்டாம் நிலைக்காவலர் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11, 2018) நடந்தது. 232 மையங்களில் சுமார் 3 லட்சம் பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. பொது அறிவு பகுதியில் இருந்து 50 வினாக்களும், உளவியல் பிரிவில் இருந்து 30 வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். அவர்களுக்கு உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான கால வர