Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: threatened actor Kamal Hassan not to confront the lion

சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் பொறுமை இழந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிங்கத்துடன் மோத வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளை, நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, 'ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா?' என, கேள்வி எழுப்பி இருந்தார் கமல்ஹாசன். மேலும், 'என் இலக்கு, தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே. என் குரலுக்கு வலு சேர்க்க, யாருக்கு துணிச்சல் உள்ளது; இதற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உதவியாக வரலாம். அவர்கள் மழுங்கி போயிருந்தால், வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாத வரை, நாம் இன்னும் அடிமைகளே... புதிய சுதந்திர போராட்டத்திற்கு சூளுரைக்க, துணிவு உள்ளவர்கள் வரலாம்; நிச்சயம் வெல்வோம்,' என்று, பதி