Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: smells

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள
தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பளபளவென்று கண்ணாடி போல மின்னும் சாலைகள், கைகளால் துடைத்துவிட்டு சாலையிலேயே சோறள்ளிப் போட்டு சாப்பிடலாம்; எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை; மூடப்பட்ட சாக்கடைக் கால்வாய்; வீடுகள்தோறும் கழிவறைகள் என்றெல்லாம் பாராட்டலாம்தான். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் பிறந்த ஊரை மட்டும் தரம் உயர்த்தாமலா இருப்பார்? என்று எல்லோருமே சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்கிறது. குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் இருக்கும் வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். அவருடைய வாழ்வின் தொடக்கப் பகுதி அங்குதான் கழிந்தது. பிரதமரின் சொந்த ஊர் என்பதால், அதுவும் டீ விற்ற ஒருவர் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கிறார் என்பத