Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: rajinikant

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ல் தனது அரசியல் பிரவேசம் குறித்து திடமாக அறிவித்த பின்னரும் கூட, தன் படங்களுக்கான புரமோஷன் உத்தியாகவே பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. அதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ''சமூக ஊடகங்களில் என் உடல்நலம் குறித்து வெளிவந்திருக்கும் தகவல்கள் உண்மைதான். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை,'' என்றார்.   இதனால் அவர் ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற அய்யம் பல மட்டங்களிலும் எழுந்தது.   இந்நிலையில், நவ. 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ரஜினி, ஓரிரு நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவை அறிவிப்
அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியாயினர். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான் போராட்டம் வேறு திசைக்குச் சென்றதாகவும், இப்படி எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் சொன்னார். இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திர
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &