Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: oxygen auto

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந