Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: infertility

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஜூலை 25, 1978. இந்த நாள், உலக வரலாற்றை புரட்டிப்போட்டதுடன், மருத்துவ உலகில் அதீத மகிழ்ச்சியையும், மதவாதிகளிடையே அதிர்ச்சியையும் ஒருசேர அதிகரித்த நாள். ஆம். அன்றுதான், இங்கிலாந்தில் உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையான லூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்த தினம். ''சொத்து சுகம் எவ்வளவு இருந்தாலும் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே'' என ஏங்குவோர் பலர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்ததுதான் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம். மருத்துவ உலகினர் இதை மகத்தான பரிசளிப்பு என்றாலும், ஆணும், பெண்ணும் இணை சேராமலே குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயற்கைக்கு முரணானது என்ற பேச்சும் எழாமல் இல்லை. ஆனாலும், உலகமயமாக்கலால் மாறி வரும் கலாசாரம், உணவுப்பழக்கம், மது, புகைப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவைகளால் ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்ம
ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஒரு பெண் குழந்தையின் விலை இரண்டு லட்சம் ரூபாய் என்றும், குண்டான, அழகான, அமுல் பேபி மாதிரியான ஆண் குழந்தை நாலேகால் லட்சம் ரூபாய் என்றும் குழந்தைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் ராசிபுரம் செவிலியர் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.   மாறி வரும் உணவுப்பழக்கவழக்கம், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைக்கு ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இருபாலருக்குமே 50 சதவீதம் வரை மலட்டுத்தன்மை குறைபாடு இருக்கிறது என்கிறது மருத்துவத்துறை. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தாலும், அதற்காகும் அதிகபட்சமான செலவுகள் காரணமாக குறுக்கு வழியில் பலர் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'காரா' (CARA - Central Adoption Resource Authority) மூலம் சட்டப்படி குழந்தைகளை தத்து எடுக்கலாம். எனினும்,
கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது. இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவ