தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்
ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது.
இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒ...