விளை நிலங்களை பிடுங்குவதற்காக அரசு வேலையில் முன்னுரிமை… முதியோர் உதவித்தொகை… சுயதொழில் கடன்… தினுசு தினுசாக சரடு விடும் வருவாய்த்துறை!
எட்டு வழிச்சாலைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டும் சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு, சுயதொழில் கடனுதவி என தினுசு தினுசாக சரடு விட்டு வருகின்றனர்.
சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் அரியானூரில் தொடங்கி மஞ்சவாடி கணவாய் காப்புக்காடு வரை 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
அரியானூர், உத்தமசோழபுரம், பூலாவரி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னக்கவுண்டபுராம், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, குள்ளம்பட்டி, பருத்திக்காடு, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களின் வழியாக பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக விளை நிலங்களைக் க...