Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Grama Sabha

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

அரசியல், முக்கிய செய்திகள்
சேலம் அருகே நடந்த திமுக மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த வீரபாண்டி ராஜாவால், அவருக்கு எதிர்தரப்பினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு உருவானது. விரைவில் வர உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக வகுத்துள்ள பரப்புரை வியூகங்கள் மக்களிடம் வெகுவாக கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக அக்கட்சியினர் நேரடியாக மக்களை சந்தித்து, இப்பொழுதே அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறைகளையும், ஆளுங்கட்சியின் அவலங்களையும் கேட்டு வருகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   கட்சி அளவில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் அதேநேரம், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களும் வெட்டவெளிச்சமாகத் தவறவில்லை. சேலம் கிழக்கு மாவட்ட திமுகவைப் பொருத்தவரை அயோத்தியாப்பட்டணம் மிக ம
தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, இரண்டு ஆண்டுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாததால் ஒரு கிராமமே வெளிச்சத்தை நோக்கி நகரப்பகுதிக்கு படையெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குள்ளம்பட்டி கிராமம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர்.   சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.   தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் கண்துடைப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுவது அம்பலமாகி உள்ளது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   கிராம சபைக்கூட்டம்   இந்தியா 70 சதவீதம் கிராமங்களையும், விவசாயத்தை பிரதானத் தொழிலாகவும் கொண்ட நாடு. நகர்ப்புறத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயமாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.   அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.   385 கிராமங்களில்...   தமிழகம் முழுவதும் கடந்த அதன்படி அக்டோபர் 2, 2018)ம் தேதியன்று 12618 கிராமங்களிலும் இக்கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவ