Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Food Safety Officer

வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உருண்டை வெல்லம் என்றால் அதன் தித்திப்பு சுவை மட்டும்தான் நினைவுக்கு வரும் என்று நினைத்தால் அது உங்களின் அறியாமைதான். ஏனெனில், கரும்புச்சாறை பிழிந்து, காய்ச்சி தயாரிக்கப்படும் வெல்லத்தில் கரும்புச்சாறு மட்டுமின்றி சூப்பர் பாஸ்பேட் உரம், சோடியம் ஹைட்ரோசல்பைடு சலவைத்தூள் ஆகிய வேதிப்பொருள்களும், இன்ன பிற நிறமூட்டிகளும் கலந்திருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கிறது உணவுப்பாதுகாப்புத்துறை.   சேலத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் பரவலாக வெல்லம் உற்பத்தி ஆலைகள் சிறியதும், பெரியதுமாக இயங்கி வருகின்றன. தைப்பொங்கலை குறிவைத்து இப்போது வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் மட்டுமின்றி இனிப்பு பண்டங்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதால், எல்லா காலத்திலும் உருண்டை வெல்லத்திற்கு மிகப்பெரும
மார்வாரிகளால் போலீசார் காட்டில் மழை…  எடப்பாடி மாவட்டத்தில் சக்கப்போடு போடும் போதைப்பொருள் வர்த்தகம்!

மார்வாரிகளால் போலீசார் காட்டில் மழை… எடப்பாடி மாவட்டத்தில் சக்கப்போடு போடும் போதைப்பொருள் வர்த்தகம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக மார்வாரி சமூகத்தினர் இந்த வணிகத்தில் ஏகபோகமாக திளைத்து வருவதோடு, அவர்களைக் கண்டும் காணாமலும் இருக்க காவல்துறையினர் காட்டிலும் பண மழை கொட்டி வருகிறது.     குட்கா, ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு நடுவண் அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ள நிலையில், சேலம் மாநகரில் மட்டும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலம் மாவட்டத்திலேயே இந்தப் பொருள்கள் தடையில்லாமல் கிடைப்பது பல மட்டத்திலும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.   மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி ரெய்டுகள் நடத்தி,