பேனாக்காரன் பேச்சு: பெரியார் பல்கலையில் அடுத்த பதிவாளர், தேர்வாணையர் யார்?
பகல்ல பக்கம் பாத்து பேசணும்... ராத்திரியில அதுவும் பேசக்கூடாதுனு சொல்லுவாங்க என்றபடியே ஞானவெட்டியானையும், ஊர்சுற்றியையும் தோள்களில் தட்டியவாறே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.
''நீ விஷயம் இல்லாம இந்த நேரத்துல வர்ற ஆளு இல்லையே... என்ன விஷயம் என கேட்டேவிட்டார்'' ஊர்சுற்றி. வேறென்ன...வழக்கம்போல பெரியார் பல்கலைய பத்தின சேதிதான்.
''பெரியார் பல்கலையில தேர்வாணையர்
பதவி 2018ம் வருஷம் பிப்ரவரி
மாசத்துலருந்து காலியா கிடக்கு.
ஆகஸ்ட் மாசத்துல இருந்து
பதிவாளர் பதவியும் காலியாயிருச்சு.
ஒரு பல்கலைக்கு துணைவேந்தர்
பதவி எப்படி முக்கியமோ
அதுபோல இந்த ரெண்டு போஸ்டுமே
ரொம்ப ரொம்ப முக்கியமானது,''
என்று பேனாக்காரர் சொல்லி முடிப்பதற்குள்,
''அதெல்லாம் தெரிஞ்ச கதையாச்சே
புதுசா என்ன இருக்கு?,'' என
அவசரப்படுத்தினார்
ஞானவெட்டியான்.
''எதுக்கு இத்தன அவசரம்....அவசர...