சேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது!
சேலம் அரசு மோகன்
குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை
மருத்துவர் தனபால்
உள்பட தமிழகம்
முழுவதும் 20 பேருக்கு
சிறந்த மருத்துவர்
விருது இன்று
(2019 ஆகஸ்ட் 22)
மாலை
வழங்கப்படுகிறது.
மருத்துவத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் மருத்துவர்களைக் கவுரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு சேவை, தனித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் இந்த விருது மற்றும் வெகுமதியை வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவள்ளூர் பொன்னேரி அ...